தொற்றா நோய்த் தாக்கத்துக்கு சிறார்கள் உள்ளாகும் ஆபத்து – தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை!

Sunday, January 6th, 2019

இலங்கைச் சிறார்கள் தொற்றா நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறார்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது என்று தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் திலக் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறார்கள் நாளாந்தம் உரிய முறையில் செயற்படாதுள்ளமையே இதற்கு முக்கிய காரணம். பாடசாலை மாணவர்களில் 13 முதல் 16 வரையான மாணவர்களிடையே முன்னெடுக்கப்பட் ஆய்வில் 20 வீதமானவர்கள் எந்த உடற்பயிற்சியும் இன்றி உள்ளமை தெரியவந்துள்ளது. இந்த நிலமை தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: