தொடர் மழை: நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் மழைக் காலநிலை காரணமாக நீர்மின்னுற்பத்தி நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தனதெரிவித்துள்ளார்.
இதனால் மின்னுற்பத்தியும் அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நெல் உற்பத்திக்கும், மேலதிக பயிர் உற்பத்திக்கும் சிறந்த நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதிடபிள்யு.எம்.எம்.வீரக்கோன் தெரிவித்தார்.
இதனால் சிறுபோகத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி நடவடிக்கையில் மேலும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும் அவர்குறிப்பிட்டார்.
Related posts:
இரட்டை குடியுரிமை உள்ளவர்களுக்கு உயர் பதவிகளை வழங்க வேண்டாம் - பெப்ரல்!
விக்கியை விமர்சித்து நான் பிழைக்க வேண்டியதில்லை – தவராசா!
நியூ டயமன்ட் கப்பல் தீப்பரவல் சம்பவம் - இரண்டு வருடங்களின் பின்னர் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகா...
|
|