தொடர் காய்ச்சல் – யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பஸ்தர்!

Monday, March 24th, 2025

5 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – தர்மபுரம், உழவனூர் பகுதியை சேர்ந்த நடராசா இன்பராசா (வயது 56) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தருக்கு கடந்த 19ஆம் திகதி இரவு காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பெறுவதற்காக அடுத்தா நாள் காலை தர்மபுரம் வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போது மேலதிக சிகிச்சைக்காக அவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

000

Related posts:


வெள்ளம் ஏற்படும் அனர்த்த நிலை - தயார் நிலையில் படையினர் என விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு!
புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் - கல்வி அமைச்சர...
செங்கடலை இரத்தக் கடலாக மாற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சி - துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் க...