தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் – இலங்கையிடம் அமெரிக்கா உறுதி!
Thursday, March 7th, 2019
இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளினதும், ஜெனிவா தீர்மானித்தினதும், முழுமையான அமுலாக்கத்திற்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்ளிஸ், ஊடகவியலாளர்கள் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் கடப்பாட்டையும் அமெரிக்கா கொண்டுள்ளது.
இதற்கமைய, நீண்டகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்க தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்க எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வாகனங்கள் பற்றி முறைப்பாடு செய்யவும் - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்!
வாக்காளர் அட்டையில் தவறிருந்தால் உடனடியாக அறியத் தாருங்கள் - தேர்தல் ஆணைக்குழு!
மன்னார் மடு திருத்தல பெருவிழா ஆரம்பம்!
|
|
|


