தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவோம் – மீண்டும் அறிவித்து இந்தியா!
Tuesday, September 6th, 2022
அண்மைக்காலமாக இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான வதிவிட பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா, நெருங்கிய அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு இந்தியா ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து ஸ்தாபித்த அபிவிருத்தி சகோதரத்துவ நிதியத்தின் மூலம் தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் 51 நாடுகளில் 66 திட்டங்களுக்காக ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான வதிவிட பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போலி நாணயத்தாளுடன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவர் கைது!
அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர்...
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு!
|
|
|


