தொடரும் சீரற்ற காலநிலை – அனர்த்தங்களில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு!
Monday, June 3rd, 2024
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் 5 மரணங்களும், மாத்தறை பிரதேசத்தில் 4 மரணங்களும், அவிசாவளை பிரதேசத்தில் 3 மரணங்களும் பதிவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற, தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் சீரற்ற காலநிலை காரணமாக 447 குடும்பங்களைச் சேர்ந்த 995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


