தொடரும் எரிபொருள் நெருக்கடி – ஜூலை 10 க்குப் பின்னரும் பாடசாலைகள் மூடப்படலாம் – கல்வி சாரா ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின்னரும் பாடசாலைகள் மூடப்படும் என கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களால் பாடசாலை மாணவர்களும் சிக்கியுள்ளதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை எனவும், எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை எரிபொருள் நாட்டுக்கு வராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை மாதத்தில் பாடசாலைகள் மூடப்படலாம் என்றும், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளால் கல்வி அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம்!
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் – அரச தலைவர் ரணிலுக்கு பாரத ப...
குவைத்தில், இலங்கையர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை - ஐ.நா கண்டனம் !
|
|