தொடருந்துகளில் பெண்களுக்கான பயணபெட்டிகள் இணைப்பு!

Friday, March 8th, 2019

சர்வதேச மகளிர் தினமான இன்று தொடக்கம் 7 அலுவலக தொடருந்துகளில் பெண்களுக்கான பயணபெட்டிகள் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் வான் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்கள் முகங்கொடுக்கும் சிரமங்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய காலை நேரங்களில் மீரிகம, ரம்புக்கணை, பொல்காவலை மற்றும் மஹவ ஆகிய தொடருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் அலுவலக தொடருந்துக்களில் மகளிருக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, புத்தளம் மற்றும் காலி ஆகிய தொடருந்து நிலையங்களில் இருந்து காலை வேளைகளில் மருதானையை நோக்கி பயணிக்கும் தொடருந்துக்களிலும் பெண்களுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்பாடானது எதிர்காலத்தில் சகல தொடருந்து சேவைகளிலும் இணைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்...
இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவிப்பு!
கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் - விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரை!

தொழிலை இழந்து நாடு திரும்புவோருக்கு வட்டியில்ல கடன் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவி...
நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம் – வெளியிடப்பட்டது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித...
5 மணித்தியால மின் தடை - 600 கோடிக்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு - மின்சக்தி அமைச்சரும் செயலாளர...