தொகை மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!
Thursday, November 17th, 2016
அரசாங்க மற்றும் அரச சார்பு சேவைகள் சார் பணியாளர்கள் தொடர்பான தொகை மதிப்பீட்டை வெற்றி பெறச் செய்ய உதவுமாறு குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தொகை மதிப்பீடு இன்று காலை 9.30 தொடக்கம் முற்பகல் 11.30 வரை இடம்பெறும். இதற்குரிய கேள்விக் கொத்தை சரியாக நிரப்பி உதவுமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமரசத்தரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் அரச சார்பு சேவைகள் சார் பணியாளர்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்து, அவர்கள் தொடர்பான சமூக பொருளாதார தகவல்களை சேகரிப்பது தொகை மதிப்பீட்டின் நோக்கமாகும். இதன் மூலம் பணியாளர்களின் சேவைகளை சிறப்பாக்க முடியும் என பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். இம்முறை தோட்டத் தொழிலாளர்களும் தொகை மதிப்பீட்டில் உள்ளடக்கப்படுவது சிறப்பம்சமாகும்.
இலங்கையில் முதல் தடவையாக 1968ஆம் ஆண்டு அரச துறை பணியாளர்கள் சார்ந்த தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை என்ற ரீதியில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முறை 11ஆவது மதிப்பீடு இடம்பெறுகிறது.

Related posts:
|
|
|


