கிளிநொச்சில் A9 வீதியை மட்டும் பார்த்து இது அபிவிருத்தி அடைந்த பிரதேசம் என்று கூறிக்கொள்ள முடியாது – யாழ் இந்திய துணை தூதுவர் நடராஜன்!

Saturday, March 3rd, 2018

கிளிநொச்சில் A9 வீதியை மட்டும் பார்த்து இது அபிவிருத்தி அடைந்த பிரதேசம் என்று கூறிக்கொள்ள முடியாது . இந்த A9 வீதிக்கு அப்பால் சென்று மக்களின் நிலைமைகளை அவதானிக்கும் போது தான் மக்களின் உண்மை நிலைமை விளங்கும் . இவ்வாறு யாழ் இந்திய துணை தூதுவர் நடராஜன் தெரிவித்தார்

உலக தாய் மொழி நாளும் இலங்கை குமரி தமிழ் மன்றத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நாளும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற போது நிகழ்வின் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் கிளிநொச்சி கிராமங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் அவ் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறன்றது குறிப்பாக வடமாகாணசபை உறுப்பினர் வை தவநாதன் அவர்களுடன் சில கிராமங்களுக்கு சென்ற போது தான் மக்களின் வாழ்வு நிலை பற்றி பல உண்மைகளை நான் தெரிந்து கொண்டேன் எனவே A9 வீதியை மட்டும் வைத்து மதீப்பீடு செய்யாமல் மக்களின் கிராம மட்ட வாழ்வை விருத்தி செய்ய வேண்டும் என ஆர் நடராஜன் அவர்கள் தெரிவித்தார்

கவிஞர் நா.வை குகராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தென்னிலங்கையில் இருந்தும் இலக்கிய துறை சார்ந்தூர் கலந்து கொண்டதுடன் வடமாகாண சபை உறுப்பினர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மாணவர்கள் என்போரும் கலந்து சிறப்பித்தனர்

நிகழ்வில் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 121 பாடசாலைகளுக்கு நூல்களும் அன்பளிப்பு செய்யபட்டது இன் நிகழ்வு தொடர்பாக நாடத்த பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: