தேவையேற்படின் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் – இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவையேற்பட்டால் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த நத்தார் பண்டிகையின் பின்னர் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்ததன் ஊடாக அவ்வாறான காலப்பகுதியில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதில்லை என உறுதியாகியுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் டிசம்பர் நத்தார் பண்டிகை மற்றும் அதன்பின்னர் இருந்த தொடர் விடுமுறைக்கு பின்னர் அதிகப்படியான கொவிட் தொற்றாளர்கள் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பதிவாகியிருந்தனர். 2020 க்கு முன்னர் நாம் பண்டிகைகளை கொண்டாடும் விதத்தில் கொண்டாடினால் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கை பணியாளர்களின், தனிமைப்படுத்தல் காலத்தைக் குறைப்பது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|