தேவையான ஔடதங்கள் கையிருப்பில் – துறைசார் அமைச்சு அறிவிப்பு!

அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான ஔடதங்கள் அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் பிரிவுகளுக்கு மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்யும்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெரசிட்டமோல் (Paracetamol) மருந்து உற்பத்தியை துரிதப்படுத்துமாறு உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பரவிவரும் நோய்கள் காரணமாக பெரசிட்டமோல் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பெரசிட்டமோல் மருந்தை மொத்தமாக கொள்வனவு செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லையெனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நீதிமன்றில் ஆஜராகுமாறு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்னவுக்கு உத்தரவு!
உள்ளாட்சி தேர்தல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை - பெப்பரல் !
மின் கட்டணச் சலுகை வர்த்தகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீ...
|
|