இலங்கையைப் போன்று ஏனைய நாடுகளிலும் போராட்டங்கள் உருவாகலாம் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

Monday, May 23rd, 2022

அரசாங்கத்தின் முறையான ஆதரவு இல்லாவிட்டால், ஏனைய நாடுகளில் இலங்கை பாணியில் போராட்டங்கள் வெடிக்கலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

சமூகத்தின் ஏழ்மையான மக்களுக்கு உணவு மற்றும் எரிசக்தி செலவை அரசாங்கங்கள் மானியமாக வழங்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“இரண்டு முன்னுரிமைகள் உள்ளன, ஒன்று மிகவும் ஏழ்மையான மக்கள், சமூகத்தின் பிரிவுகள் இப்போது அதிக உணவு மற்றும் எரிசக்தி விலைகளுடன் போராடுகின்றனர். இரண்டாவதாக, உக்ரைனில் நடந்த போரினால் மிகவும் சேதமடைந்த வணிகங்களை ஆதரிப்பது,” என்று ஜார்ஜீவா சுட்டிக்காட்டியுள்ளார்.

தொற்றுநோய்க்கு எதிராக தாங்கள் பெற்ற பெரும் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய அரசாங்கங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் ஜார்ஜீவா கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: