தேவையான உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க நடவடிக்கை – அமைச்சர் சமல் ராஜபக்ஷ!

Wednesday, March 25th, 2020

நாட்டில் மோசமான அனர்த்தம் ஏற்பட்டுள்ள வேளையில் மக்களுக்கு குறைவின்றி, தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் பற்றி அமைச்சர் சமல் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் நலன்புரி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அத்தியாவசிய பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்காக ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வது பற்றியும், உணவு வகைகளை பொதியிட்டு, அவற்றை மக்களிடம் சென்று விற்பனை செய்வது தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.

இராணுவம், சிவில் பாதுகாப்புப் படையணி என்பனவற்றின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது. சதொஸ விற்பனை நிலையங்கள், கமநல சேவைகள் மத்திய நிலையங்கள், மகாவலி மத்திய நிலையங்கள் என்பனவற்றின் ஊடாக மரக்கறி வகைகள் விற்பனை செய்யப்படவிருக்கின்றன.

அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்குமாறு அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை தொடர்பான வாய்ப்புக்களையும் கண்டறியுமாறு அமைச்சர் உரிய தரப்புக்களுக்கு பணிப்புரை வழங்கினார்

Related posts: