ஆஸி – இலங்கை நட்புறவை கிரிக்கெட் வலுப்படுத்துகிறது – பிரதமர் !
Saturday, February 18th, 2017
ஆஸ்திரேலிய – இலங்கை இடையிலான நட்புறவை வலுப்படுத்த கிரிக்கெட் விளையாட்டை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விகரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தச் சுற்றுத்தொடரில் இலங்கை அணியுடன் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியப் பிரதமரின் பதினொருவர் அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை மிகவும் முக்கியமான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை - சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர்!
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது - குழந்தைகள...
செஸ் வரி அதிகரிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது - நிதி இராஜாங்க அமை...
|
|
|


