தேவையற்ற அரச செலவீனங்களைக் குறையுங்கள் – அமைச்சரவைக்கு ஜனாதிபதி உத்தரவு!

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் வேளையில் தேவையற்ற அரச செலவீனங்கள் குறித்து ஜனாதிபதி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அரசாங்கம் அனுபவிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அமைச்சுகள் தேவையற்ற விதத்தில் பயன்படுத்தும் வாகனங்கள் உட்பட அரசாங்கத்தின் அனாவசிய செலவுகளைக் குறைக்குமாறு அமைச்சரவைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்கள் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதால் ஏற்பட்ட சுமையை அனுபவிப்பதால் அமைச்சர்கள் தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தொழில் அதிகாரிகள் வேலைக்கு திரும்பும்வரை சம்பளம் கிடையாது – தொழில் ஆணையாளர் திட்டவட்டம்!
கிழக்கில் மின்சாரம் இன்றி தவிக்கும் 15,000 குடும்பங்கள் - ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!
விற்பனை நிலையங்களில் திருட்டு சம்பவம் அல்லது ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் உடன் அறிவிய...
|
|