தேவைப்பட்டால் எந்நேரத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக கடும் ஆபத்து நிலவுகின்ற பகுதிகளில் தேவைப்பட்டால் ஊரடங்கினை பிறப்பிப்பதற்கு தயார் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் வெளியாகும் புள்ளிவிபரங்களை அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நோயாளிகள் இனங்காணப்படும் பகுதிகளில் அவசியமென்றால் ஊரடங்கைப் பிறப்பிப்பதற்கு அரசாங்கம் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் காணப்படும் நிலைமையை அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக நாணய நிதியத்துடன் இணக்கம் கொள்ளும் இலங்கை!
குறைந்த வட்டியின் கீழ் வீட்டை கொள்வனவு செய்வதற்காக கடன் - நகர அபிவிருத்தி அதிகார சபை!
கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
|
|