கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
Sunday, March 14th, 2021
கொரோனா மூன்றாவது அலை ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறினால் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 526 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 281 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, நாட்டில் இதுவரை 87,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - காலநிலை அவதான நிலையம்!
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆப்கானிஸ்தான் விமானம் - சிறைப்பிடிக்கப்பட்டனர் 84 இராணுவ வீரர்கள்!
அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் துரிதமாக தீர்வு காண்பே...
|
|
|


