தேர்தல் முறைமை மறுசீரமைப்பு – ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிப்பு!

Wednesday, July 17th, 2024

தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, இன்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 9 உறுப்பினர்களுடன் கடந்த வருடம் ஒக்டோபர் 15 ஆம் திகதி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதன் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், 130 க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் கூடிய தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியமும் கருத்திற்க...
ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியில் இதுவரை பிரச்சினை ஏற்படவில்லை - இலங்கை தேயிலை சபை அறிவிப்பு!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் முன்னாள் MPக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாது -  நாடாளு...