அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியமும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் – வலி தெற்கு பிரதேச சபையில் வலியுறுத்து!

Monday, January 24th, 2022

பிரதேசத்தின் அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியத்தையும் கருத்திற்கொண்டு அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தர்சன் தலைமையில் நடைபெற்றது இதன்போது கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளில் பல தாமதங்கள் மற்றும் குழப்பங்கள் காணப்பட்டதாகவும் இவை இவ்வாண்டிலும் தொடர்வதற்கு அனுமதிக்க கூடாது என்றும் சபையின் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையிலேயே தவிசாளரினால் இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் அரிகரன் கருத்து கூறும்போது – மக்கள் அனைவரும் இந்த பிரதேசத்திற்குரியவர்கள் என்றதன் அடிப்படையில் அவர்களது தேவைகள் அனைத்தும் தீர்வுகாணப்பட வேண்டியது அவசியம். இதன்போது வேறுபாடுகள் பாரபட்சங்களை காட்டாது எமது பிரதேச அபிவிருத்தியின் தேவைகளை  மக்கள் நலன்சார் சேவைகளாக இந்த புதிய ஆண்டில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேநேரம் யாழ் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அதிகூடிய வருமானத்தை ஈட்டும் சபைகளுள் ஒன்றாக இருக்கும் எமது சபையின் வருமானங்கள் அனைத்தும் பெற்றுக்கொள்ளப்படுவது எவ்வளவு அவசியமானதோ அதே போன்று அபிவிருத்திகளும் அந்த வருமானத்தினூடாக முன்னெடுப்பதும் அவசியம் என்றும் வலியுறுத்திய அவர் வியாபார நோக்காக கொண்டு எடுக்கப்பட்ட ஒன்றில் இலாபமும் நட்டமும் ஏற்படுவது சகயம். இதை ஏற்றுத்தான் அந்த குத்தகையை எடுக்கின்றனர். இன்னிலையில் மருதனார் மடம் சந்தை குத்தகைதாரருக்கு கொரோனா நிலைமைக்கான விலைக்கழிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதனால் மீண்டும் அவ்வாறானதொரு வரிக்கழிப்பை வழங்க முடியாது என்றும் கட்டுவதற்கான சலுகை வழங்கலாம் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதேநேரம் சபையின் சில விடயங்கள் பாதகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஊழியர்களின் ஒத்திப்புக்களும் சபைக்கு முழுமையாக கிடைப்பது குறைவு, தெருவோர கடைகள் புதிது புதிதாக வருதல் அதிகாரிகளின் தவறான அனுமதி  இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

அந்தவகையில் பொதுப் பிரச்சினைகளில் தெளிவான கொள்கை அவசியம் என இந்த சபையில் அது குறைவு. தீர்மானங்கள் நிறைவேற்றுபதும் அதை அறிக்கையிடுவதும்  முக்கியமல்ல . அதைச் சரியாக நடைமுறைப்படுத்துவதே அவசியம்.

இதனிடையே தெருவோர மின்விளக்கு பொருத்தலில் எமது சபை தோல்லி கண்டுள்ளது. இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த நான்கு வருடங்களாக ஒரு கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனான் அதன் பெறுபேறுகள் மிகக் குறைவாகவே இருக்கின்றது.

குறிப்பாக மின் விளக்கு இன்று பழுதடைந்தால் அதை திருத்த ஆறு மாதங்கள் வரை சிலசமயங்கள் இழுத்தடிக்கப்படுகின்றது. இதற்கு பொறுப்பு கூறவேண்டியது தவிசாளர் தான். மக்களுக்கு நாம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்தவகையில் தவறுகள் ஏற்படுவது வழமைதான் ஆனால் அது தொடர்ந்து செல்வதே பரிதாபமானது. அத்துடன் சபையின் நீடிப்பு என்பது எமது அரச தலைவர் கோட்டபய ராஜபக்சவினால் எமக்கு வழங்கப்பட்டுள்ள போனஸ் என்றுதான் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். அந்தவகையில் இந்த ஆண்டில் அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து சிறப்பான சேவையை செய்ய நாம் ஒன்றுபட வேண்டும் என்றுமம் வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே அகில இலங்கை ரீதியில் சுன்னாகம் நூலகம் முதலிடம் பெற்றுள்ளதாகவும் தற்கான விருதும் கௌரவமும் அண்மையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தவிசாளர் அந்த நிலையை தமது நூலகம் பெற உழைத்து ஊழியர்களை கௌரவிப்பதற்கும் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை தமது ஆளுகைக்கள் இருக்கும் ஏனைய நூலகங்களின் மேம்பாட்டுக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வடக்கில்  2 நூலகங்களுக்கு டியிற்றல்  மேம்பாட்டை மேற்கொள்ள அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சுன்னாகம் நூலகம் என்றும் கறிப்பிட்ட அவர் இதற்கு வசகர்களது வகிபாகமேகாரணம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதேசத்தின் சுகாதார ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும் அவற்றை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் அருணாசலம் சந்திரன் – வலன்ரயன் அதற்கான சிறந்த பொறிமுறையை இவ்வாண்டிலாவது உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் மகளிர் தின ஏற்பாடுகள் தொடர்பில் ஈ.பி. டி.பியின் உறுப்பினர் தனுஜாவினால் சபையின் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சபை அனுமதி கொடுத்திருந்ததுடன் சுன்னாகம் பிரதேசத்தில் அம்மாச்சி உணவகம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஈ.பி. டி.பியின் மற்றொரு உறுப்பினர் கஜேந்தினி வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: