தேர்தல் நடத்துவது தொடர்பில் முக்கிய சந்திப்பு!
Thursday, September 28th, 2017
தேர்தல் நடத்துவது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருடன் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக உள்ளுராட்சி மன்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இதன்போது தேர்தல் நடத்தும் போது தமது அமைச்சு செய்ய வேண்டியக கருமங்கள் தொடர்பிலும், தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் கடமைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.இந்த சந்திப்பு மிகவும் வினைத்திறனாக அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சந்திப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மற்றும் அதன் அதிகாரிகளும், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
ஈ - தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் மோசடி!
தொழிற்சங்க நடவடிக்கையில் வனவளத்துறை அதிகாரிகள்!
ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் உள்ளூராட்சி சபைகளை உடனடியாக கலைக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
|
|
|


