தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு வேடிக்கையானது – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரிடம் கோஷங்கள் இல்லாததால், அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதாக போலியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி இவ்வருடம் 54 பேர் பலி!
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை !
உரிமையின்றி பயன்படுத்திவந்த அரச காணிகளுக்கான உரிமங்கள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு!
|
|