தேர்தல் சட்டமீறல் தொடர்பில் ஈ.பி.டி.பி தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Sunday, July 5th, 2020

யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும்ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான அங்கஜன் இராமநாதன் தேர்தல் விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பில் தெரியவருவதாவது – ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளராகிய அங்கஜன் இராமநாதன் அரசாங்கத்தின் ‘சபிரிகமக்” (நிறைவான கிராமம்) வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை ‘அங்கஜன் இராமநாதனின்”வேலைத் திட்டங்கள் என பிரசாரம் செய்வதுடன், பூர்த்தியடைந்த செயற்திட்டங்களை வைபவரீதியாக மக்களிடம்  கையளித்தும் வருகின்றார் எனவும்  அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த கையளிப்பு நிகழ்வுகளின் புகைப்படங்களையும் தனது முகநூலில் பதிவேற்றி விளம்பரப்படுத்தி வருகின்றார்.

அவரது முகநூலில் பதிவேற்றப்பட்ட விளம்பரங்களின் பிரதிகள் ஆதாரங்களாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: