எதிர்வரும் 21 ஆம் திகதி அரச பணியாளர்களுக்கான இம்மாத கொடுப்பனவு வழங்கப்படும் – நிதியமைச்சின் செயலாளர்!
Tuesday, May 18th, 2021
அரச பணியாளர்களுக்கான இம்மாத கொடுப்பனவை உரிய தினத்துக்கு முன்னதாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரச ஊழியர்களுக்கான இம்மாத கொடுப்பனவு, எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொவிட் பரவல் நிலைமையால் விதிக்கப்படும் நடமாட்டக் கட்டுப்பாடு மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான கொடுப்பனவு, சிங்கள – தமிழ் புத்தாண்டு முன்னதாக வழங்கப்பட்டமை ஆகிய காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு மேலும் பல கட்ட வசதிகள்!
அனுமதியை மீறி கட்டடத்தின் உடைந்த பகுதி நிர்மாணிக்கப்பட்டமையால் அனர்த்தம் ஏற்பட்டது - கண்டி சம்பவம் த...
இன்று நள்ளிரவுமுதல் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்யத் தடை !
|
|
|
தற்போது பதிவாகும் கொரோனா தொற்றுக்கு 95.8 வீதம் டெல்டா திரிபே காரணம் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆ...
நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற தாயார் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவ...
இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம்முத...


