தேர்தல் கண்காணிப்பில் பவ்ரல் சார்பில் 7,000 பேர்!
Tuesday, January 16th, 2018
ஏதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 7 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர் என பவ்ரல் அமைப்புத் தெரிவித்துள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் நாடளாவிய ரீதியில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது
அத்துடன் எதிர்வரும் 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்குப் பதிவுத் தினத்தன்று ஆயிரம் பேர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
Related posts:
மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!
அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு இல்லை - சமல் ராஜபக்ச!
இராணுவம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி தெரிவிப்பு!
|
|
|


