தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல் – அனைத்து அமைசுக்களின் செயலாளர்களுக்கும் அழைப்பு!
Friday, August 2nd, 2024
தேர்தல் சட்டங்கள் தொடர்பான கடமைகள் குறித்து விளக்கமளிக்க அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே அமைச்சின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, அழைப்பு விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு தொடர்பில் நாட்டின் தற்போதைய சட்ட கட்டமைப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த வாரம், இந்த கலந்துரையாடல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் சட்டம் குறித்து விளக்கமளிப்பதற்காக அரச மற்றும் அரை அரச நிறுவனங்களின் பிரதானிகள் கொழும்புக்கு வரவழைக்கப்பட உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


