தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி!

Tuesday, February 7th, 2023

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், இந்த தீர்மானம் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேர்தல் ஆணைக்குழுவின் பதவி ஒருவர் விலகுவதால் எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென  ஏற்கனவே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கொரோனா விதிமுறைகளை மீறினர் - திருவிழா நடத்திய உபயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
இலங்கைக்கு 10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச...
மைத்திரியின் யுகத்திலேயே சீனர்களுக்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது – ஈ.பிடி.பியின் ஊடகப...