தேர்தலை நடத்த உத்தியோகபூர்வமாக எந்த தீர்மானத்தையும் தேர்தல் ஆணைக்குழு எடுக்கவில்லை – நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2023

தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த உத்தியோகபூர்வமாக எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய சபை அமர்வில் பங்கேற்று உரையாற்றியபோது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்த தீர்மானம் தேவையான கோரம் கொண்ட கூட்டத்தை கூட்டாமல் உறுப்பினர்களால் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்காக கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாகவும், தலைவர் மற்றும் மற்றுமொரு உறுப்பினர் என இரு உறுப்பினர்கள் மாத்திரமே பிரசன்னமாகினர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரண்டு உறுப்பினர்களின் முன்னிலையில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் எஞ்சிய மூன்று உறுப்பினர்களிடமிருந்து அதற்கான சம்மதம் பெறப்பட்டதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

மூன்று உறுப்பினர்கள் தேர்தல் திகதியை முடிவு செய்யாததால், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டமை சட்டவிரோதமானது.

தேர்தல் ஒத்திவைக்கப்படவும் இல்லை. ஒத்திவைப்பதற்கு தேவை ஒன்றும் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் - சி...
செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு - சுகாதார அமைச்சர் அ...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22 ஆயிரத்து 419 பேருக்கு டெங்கு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் ...