தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாகி வருவதால் சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அறிவிப்பு!

தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளதால் அதற்கான சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்;.
அத்துடன் தேர்தல் திகதியைக் குறிப்பது எமது பொறுப்பல்ல. அது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை. அவர்களுக்கு உதவி செய்ய எமக்கு முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவருகின்றது. அதனடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை தேர்தல் ஆணைக்குழு கேட்டால் அதனைவழங்க நாம் தயாராக இருப்பதாகவும் அவர் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர் கைது!
கடலில் தரித்துநின்ற கப்பலுக்கு தீவைப்பு - காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்!
தொடர் மழை - வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரி...
|
|