தேர்தலை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவிப்பு!
Tuesday, April 5th, 2022
இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்தால் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவது குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் தேர்தலுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஆணையம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளை ஒழுங்கமைக்க சிறிது காலம் எடுக்கும். தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் ஐந்துமுதல் ஏழு வாரங்களுக்குள் வேட்பாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், அது தோராயமாக மூன்றுமுதல் நான்கு மாதங்கள் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!
வைபர் மீதான தடை நீக்கப்பட்டதன் உண்மை வெளியானது!
போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
|
|
|


