தேர்தலை தாமதப்படுத்த சிலர் சூழ்ச்சி – பெப்ரல்!
Tuesday, December 5th, 2017
உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையகத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பெப்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் தினமொன்றை அறிவித்துள்ளது.
குறித்த மனு ஈவா வனசுந்தர, சிசிர டி ஆப்றூ மற்றும் மலல்கொட ஆகிய மூவர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்போது, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் றோஹன ஹெட்டியாராச்சி சார்பாக முன்னிலையாக சட்டத்தரணி நீதிமன்றத்தில் விவாதிக்கையில், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தற்போது அறிவித்தல்களை விடுத்துள்ள போதும் அதனை தாமதப்படுத்துவதற்காக பல தரப்பினர் தயாராகி வருவதாக குறிப்பிட்டார்.
Related posts:
7 ஆயிரம் போருக்கு வழங்கப்பட்ட நியமனத்தை நிறுத்த உத்தரவு!
தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது - பாதுகாப்புச் செயலாளர் கமல...
மன்னார் - மடு அன்னையின் ஆவணித் திருவிழா ஆரம்பம் - 5 இட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!
|
|
|


