குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதற்கான சாத்தியம் அதிகரிப்பு – சில பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்’ எதிர்வுகூறல்!

Sunday, November 20th, 2022

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசையில் வடமேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென் மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதால் இன்று (20) பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்’ தெரிவித்துள்ளது.

இதேவேளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு திசையில் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அத்துடன் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் உள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். அதேவேளை, தீவின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை நிலவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பு - இலங்கைக்கான கட்டார் தூதுவர்...
இலங்கை இளநீர்களுக்கு சர்வதேச சந்தையில் கேள்வி அதிகரிப்பு - தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
எதிர்வரும் வருடம் முக்கிய அனைத்து தேர்தலும் நடத்தப்படும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!