தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஜனாதிபதியால் நியமனம்!
Monday, March 4th, 2024
இலங்கையில் இந்த வருடம் இடம்பெறவுள்ள தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை முதன்முறையாக கூடிய அரசியல் அமைச்சரவையில், எதிர்வரும் தேர்தலுக்கு எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அதேவேளை, இந்தக் குழு ஒவ்வொரு வாரமும் கூட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
குறித்த குழுவில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நிமல் லான்சா, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வாக்குச் செலுத்துவதில் ஆர்வங்காட்டும் வாக்காளர்கள்!
ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர் நிதிப் பங்களிப்பு - யாழ். பல்கலை மருத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கூ...
யுக்ரைனில் உள்ள இலங்கையர்கள் குறித்து அவதானம் - வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


