தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!
Saturday, April 1st, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் அனுமதி கோரி குறித்த பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 3000 அரச உத்தியோகத்தர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
குளக்கரை வீதியின் புனரமைப்பு எப்போது நடைபெறும்? - ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சங்க...
இலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது!
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
|
|
|


