தேசிய வைத்தியசாலையின் புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் பிரிவு பிரதமரினால் திறந்து வைப்பு!
Thursday, July 29th, 2021
இலங்கை தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (29) முற்பகல் திறந்துவைக்கப்பட்டது.
இலவச சுகாதார சேவையின் சிறந்த பிரதிபலன்களை இலங்கை வாழ் மக்களுக்கு கிடைக்க செய்யும் உன்னதமான நோக்கத்தில் E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் பூரண நிதி நன்கொடையின் கீழ் இந்த மூன்று மாடிக் கட்டிடம் நிறுவப்பட்டுள்ளது.
சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் 13 கட்டில்களை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை உள்ளடக்கியதாக இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடத்தின் நினைவு பலகை பிரதமரினால் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் மாவட்டத்துக்கு சேதனப் பசளை உற்பத்திக்கு நிதி!
இலங்கையை சிறந்த பாடசாலை கட்டமைப்பை கொண்ட நாடாக மாற்றுவேன் – பிரதமர்!
எரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
|
|
|


