மற்றுமொருவரும் இராஜினாமா!

Wednesday, August 24th, 2016

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலவான தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐ.ம.சு.மு. நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர அறிவித்துள்ளார்.

இன்று (24) தனது வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை அறிவித்திருந்தார். ஆயினும் ஶ்ரீ.ல.சு.க.வின் உறுப்பினராக தொடர்ந்தும் இயங்கவுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கலவான தொகுதியின், அனைத்து சுதந்திரக் கட்சி சங்க கிளைகளையும் கலைப்பதாக, கலவான சு.க.வின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கே.டி.எஸ். சமிந்த முன்வைத்த யோசனை, பிரதேச சபை உறுப்பினர் எம். குணரத்னவினால் ஆமோதிக்கப்பட்டு அங்கீகரிக்கபட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த வக்கும்புர, எமது கட்சியின் தலைவரான இந்நாட்டின் ஜனாதிபதி, மேற்புறமாக நீல நிறத்திலும் உட்புறமாக பச்சை நிறத்திலும் காணப்படுகிறார்.

மஹிந்த ராஜபக்‌ஷவுடன், சுதந்திரக் கட்சி இருக்க வேண்டும். எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் சம்மேளத்திற்கு போவதில்லை என்பதில் நானும் உடன்படுகிறேன். கட்சியை சரியான பாதைக்கு கொண்டுவந்து, பண்டாரநாயக்கவின் கொள்கைகளை காப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதி டளஸ் அழகப்பெருமவும், அதனைத் தொடர்ந்து ஓகஸ்ட் 22 ஆம் திகதி பந்துல குணவர்தனவும் ஶ்ரீ.ல.சு.க.வின் முக்கிய பதவிகளிலிருந்து இராஜினாமா செய்த நிலையில் இடம்பெறும் மூன்றாவது தொடர் இராஜினாமா இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

சித்திரைக்கு முன்னர் இலங்கையில் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் - ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்...
யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை சிறப்பாக முன்னெடுப்பு – பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்களிப்...
பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்! இந்திய வர்த்தகர்களுட...