தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் நிதியமைச்சின் கீழ்!
Saturday, August 19th, 2017
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகிய இரண்டு நிறுவனங்களும் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான அதி விஷேட அரச வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தல், ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் குறித்த இரண்டு நிறுவனங்களும் வெளிவிவகார அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் மீண்டும் அந்த இரண்டு நிறுவனங்களும் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன
Related posts:
வங்கியில் தீப் பரவல் – கிளிநொச்சியில் சம்பவம்!
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி சிறந்தது – சுகாதார அமைச்சுக்கு மகப்பேற்று மற்றும் ப...
தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை - மாக...
|
|
|


