தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தயாரிப்பதில் சிங்கப்பூர் நிபுணத்துவத்தை நாடியது இலங்கை!

Monday, February 21st, 2022

தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தயாரிப்பதில் சிங்கப்பூரின் நிபுணத்துவத்தை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளது.

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் கே.சண்முகத்தின் அழைப்பின் பேரில், நீதியமைச்சர் அலி சப்ரியின் ஐந்து நாள் சிங்கப்பூர் பயணத்தை அடுத்து நீதியமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சட்டச் சூழலைப் பற்றிய புரிதலைப் பெற்றுக்கொள்ள சிங்கப்பூரிலிருந்து அதிகாரிகள் குழுவொன்றை இங்கு அனுப்புவது குறித்து இரு அமைச்சர்களும் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவியல் சட்டம், மத நல்லிணக்கச் சட்டம் மற்றும் சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய சட்டங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றிய விளக்கங்கள் இதன்போது நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்தோடு இந்த ந்திப்பின்போது இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதம் இடமபெற்றதாகவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தொழில் புரியச்சென்று வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 297 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
கொரோனா இறப்பு விபரங்களை மறைக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது - அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்...
வடக்கு விவசாயிகள் நெல் அறுபடையை முற்கூட்டியே திட்டமிடுவது உகந்தது - யாழ். பல்கலைகழக புவியியல்துறை வி...