தேசிய பாதுகாப்பு சட்டமூலம் உருவாக்கப்படும்!
Friday, May 13th, 2016
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இடம்பெறும் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய பாதுகாப்பு சட்டமூலமொன்று மிகவிரைவில் கொண்டுவரப்படவுள்ளது’ என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே குறித்த சட்டமூலத்தை தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் என அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தைத் தடுக்கும் சட்டமூலத்தை நீக்கிவிட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் என்ற பெயரில் புதிய சட்டமூலமொன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கூறும்போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
பொருத்தமில்லாத போட்டித்தன்மை ஊடாக சிறார்களின் மனங்கள் மாற்றமடைகின்றன - உயர் கல்வி அமைச்சர்!
இன்று எரிபொருள் விலைத் திருத்தம்!
தேசிய கலவியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம் - கல்வி அமைச...
|
|
|


