தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை உருவாக்க ஜனாதிபதி தீர்மானம்!

Tuesday, May 21st, 2019

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர், பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் உள்ளடங்களாக இந்த சபை ஏற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி, “நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பு சபைக்கு அப்பால் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக” கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த சந்திப்பின் போது, அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை உடனடியாக இரத்து செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: