தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Tuesday, February 8th, 2022

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதா என்பதை கண்டறியுய கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின் போது, விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் அதன் பின்னரான தேர்வுகள் இடம்பெற்றன.

இதன்போது அரச சேவை அல்லது கல்விச் சேவை ஆணைக்குழுக்களுக்கு விண்ணப்பதாரிகளினால் ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்தன.

இந்நிலையில் உண்மையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டனவா என்பது தொடர்பாக கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜனாதிபதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இந்தியா - இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை - அமைச்சர் காஞ்சன விஜேசே...
நலன்புரி கொடுப்பனவுக்காக வங்கி கணக்கை ஆரம்பித்து சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட மக்களுக்கு அரச அதிப...
இரண்டாம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாகத் தீர்க்க முடியும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷ...