தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் 03 தினங்களுக்கு வரையறை!
Tuesday, May 7th, 2019
ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை இம்முறை மூன்று தினங்களுக்கு வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு விஷேட செயலணியின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அஸித திசேரா தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இம்முறை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இம்மாதம் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் 18 மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் நிலைமையால் இம்முறை முப்படை, பொலிஸார் மற்றும் சிவில் சேவை படையணி ஆகியோரை இதில் ஈடுபடுத்த முடியாததன் காரணமாக அவர்களுக்கு பதிலாக சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் சர்வோதய மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.
Related posts:
சமூக வலைத்தள பதிவுகளை கண்காணிக்கிறதா வருமான வரித்துறை?!
யாழ்.மாநகரை திங்கள்முதல் முடக்கலில் இருந்து விடுவியுங்கள் – வணிகர் சங்கம் கோரிக்கை!
அரச ஊடகங்களின் பணிப்பாளர் சபையில் தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்க நடவடிக்கை - அமைச்சர் டலஸ் அழகப்பெ...
|
|
|


