தேசிய கல்வியற் கல்லூரி படிப்பை முடித்த ஆசிரிய மாணவர்களது விவரம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளது!

2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் படிப்புகளை முடித்த ஆசிரிய மாணவர்களுக்கு பொருத்தமான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் பொருட்டு இணையத்தின் ஊடாக தகவல்களைப் பெறும் திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
அதன்படி, www.ncoe.moe.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் ஆசிரிய மாணவர்கள் தங்கள் தகவல்களை வழங்கலாம் என கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த தகவல்களை வழங்குவதற்கான இறுதித் திகதி எதிர்வரும் வரும் டிசெம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர்!
இடியுடன் கூடிய மழை - பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இரண்டு நாள் விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை – பல்வேறு நிகழ்வகளிலும் பங்கேற்பு!
|
|