தேசிய அடையாள அட்டை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Thursday, May 2nd, 2019
தேசிய அடையாள அட்டையினை பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக பெரும்பாலோனர் வருகை தருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் 800 க்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளை கடந்த வாரத்தில் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் நாளாந்தம் 1600 தேசிய அடையாள அட்டைகளே விநியோகிக்கப்பட்டதுடன், தற்பொழுது 2000 தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
கடத்தப்பட்ட பிரபல இளம் வர்த்தகர் சடலமாக மீட்பு!
தொடரும் வரட்சியால் 9 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


