தேசிய அடையாள அட்டை இல்லாத மக்களுக்கு தற்காலிக அனுமதி பத்திரத்தை வழங்குமாறு அறிவிப்பு!
 Sunday, July 19th, 2020
        
                    Sunday, July 19th, 2020
            
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்களார்களுக்கு, அவர்களின் பிரிவு கிராம சேவகர் அல்லது தோட்ட அதிகாரி மூலம் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற தற்காலிக அனுமதி பத்திரத்தை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொள்வதற்காக செல்லுப்படியாகும் அடையாள அட்டை சமர்ப்பிப்பது கட்டாயம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை கிராம சேவர் மூலம் பெற்றுக் கொண்டு அதனை பூர்த்தி செய்து வாக்காளர்களின் இரண்டு புகைப்படங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
அதற்கமைய தேசிய அடையாள அட்டை, செல்லுப்படியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு, செல்லுப்படியாகும் சாரதி அனுமதி பத்திரம், அரச ஊழியர்களின் ஓய்வூதிய அடையாள அடையாள அட்டை அல்லது ஆட்பதிவு திணைக்களத்தினால் அடையாளத்தை உறுதி செய்வதற்காக வெளியிடப்படுகின்ற பொதுத் தேர்தல் அடையாள அட்டையில் தேசிய அடையாள அட்டையில் உள்ள விலாசம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        