தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! ​

Thursday, May 16th, 2019

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருகை தருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒருநாள் சேவைக்காக வருகைதருவோரின் எண்ணிக்கை 2,500 வரை அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக வருவோரின் தொகை 2 மடங்காக அதிகரித்துள்ளமையால் மேலதிக அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

Related posts: