தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அரசியலமைப்புக்கு உட்பட்டதே – சபாநாயகர் கரு ஜயசூரிய!

Friday, September 23rd, 2016

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தினார்.

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி எனும் சட்டமூலம் முழுமையாகவோ அல்லது இச்சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடுகளுமோ அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிடுவதற்கும் சபாநாயகர் உத்தரவிட்டார்.

நாட்டைக் கட்டியயெழுப்புதல் வரி சட்டமூலம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் சபையில் முன்வைக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் இத்தீர்ப்பை அறிவித்துள்ளது.

12kaer_22092016_kaa_cmy

Related posts: