தேங்காயை கூடுதலான விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை!
Friday, November 24th, 2017
தேங்காயின் உயர்ந்த பட்ச சில்லறை விலை 75 ரூபாவாகும். ஒரு கிலோ பருப்பின் விலை 125 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.
உயர்ந்த பட்ச விலையை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சதோசவின் தலைவர் ரி.எம்.கே.பீ.தென்னக்கோன் தெரிவிக்கையில், புதன்கிழமையன்று கூடிய வாழ்க்கைச் செலவினக் குழுக் கூட்டத்தில் இது பற்றித் தீர்மானிக்கப்பட்டதாகவும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மேலும் பல தீர்மானங்களை வாழ்க்கைச் செலவினக் குழு மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் உயிரிழப்பு!
வருகின்றது பெற்றோல் ஏற்றிய கப்பல் - வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கும் நிலையங்களை...
கால்நடை தீவனத்திற்காக வளர்க்கப்படும் புல்லை விவசாய பயிராக பெயரிட விவசாய அமைச்சு தீர்மானம்!
|
|
|


