தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்!
Tuesday, May 17th, 2022
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று(17) முதல் எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒவ்வொரு மாவட்டத்திலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் K.D.S.ருவன் சந்திர தெரிவித்தார்.
குறித்த தெரிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களூடாக சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதனிடையே, எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மக்களை கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். இந்திய துணைத்தூதர் - ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் சந்திப்பு
தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை: நவாஸ் ஷெரீப் அதிர்ச்சி!
வட்டுக்கோட்டையில் திருட்டு!
|
|
|


