சுன்னாகம் பூனகரி பிரதேசங்களை மையப்படுத்தியும் காற்றாலைகள் நிர்மாணிக்கப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, December 24th, 2020

எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதில் மின்சக்தியின் தேவை அதிகரித்து வருகின்றது.அதனை, மீள்பிறப்பாக்க சக்தி மூலங்களில் இருந்து பெற்றுக்கொள்வது எமது நோக்கமாகும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

அதன் முதல் கட்டத்தின் கீழ், மன்னார் தீவில் நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையமானது, மைய மின் கட்டமைப்புக்கு 30 மெகாவோட் மின்சாரத்தை வழங்குகின்றது.

அத்துடன் 2021 ஆம் ஆண்டின் இறுதியில், அந்த திறன் 100 மெகாவோட்டாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த திட்டத்தின் பிரகாரம் சுன்னாகம் மற்றும் பூனகரி பிரதேசங்களை மையப்படுத்தியும் காற்றாலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: